வேலூர்:அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்!!!
4/14/2026
0
வேலூருக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளை முன்னிட்டு காட்பாடி அடுத்த விருதம்பட்டில் அமைந்துள்ள அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் முன்னிலையில் இந்த மலர் மாலை அணிவித்து அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தினார் தமிழக முதல்வர். இந்த நிகழ்வில் வேலூர் தொகுதி எம்பி கதிர் ஆனந்த், அணைக்கட்டு தொகுதி எம்எல்ஏவும், திமுக மாவட்ட செயலாளருமான நந்தகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்பாளர் நீல. சந்திரகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் பிலிப் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
