வேலூர் சி.எம்.சி.,மருத்துவமனையின் இயக்குநராக பொறுப்பேற்றுள்ள டாக்டர்.பிஜூஜார்ஜை டாக்டர் ஐடாஸ்கடர் அன்புக்கரங்கள் அறக்கட்டளை சார்பில் சந்தித்து சால்வை மற்றும் மாலை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்தநிகழ்ச்சியில் அறக்கட்டளை செயலாளர் ஐடா ஜி.தவசீலன், பொருளாளர் ஆர்.தேவபிரகாசம், துணைத் தலைவர் பி.ரவிக்குமார், இணைச் செயலாளர் பேராசிரியர் பி.சி.இரத்தினம், செயற்குழு உறுப்பினர் எஸ்.மகிமைரூபஸ், சமூக ஆர்வலர் பாடிபில்டர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மரியாதையை ஏற்றுக் கொண்டு சி எம் சி இயக்குநர் டாக்டர் பிஜூஜார்ஜ் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிஎம்சி மருத்துவமனையின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரை ஜாஸ்பர் செய்திருந்தார்.
வேலூர்:சிஎம்சி மருத்துவமனை இயக்குனநராக பொறுப்பேற்றுள்ள பிஜூஜார்ஜூக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து!!!
4/14/2026
0
