வேலூர்:எலுமிச்சம் பழம் விலை கடும் உயர்வு வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி!!!

sen reporter
0

வேலூர் மாவட்டம், விவசாயத்தை நம்பியே அதிகம் உள்ள மாவட்டமாகும். இந்நிலையில் விவசாயிகள் தங்களது நிலம் மற்றும் வீட்டு தோட்டங்களில் எலுமிச்சம் பழத்தை அதிக அளவு பயிர் செய்து விற்பனை செய்து தங்கள் ஜீவாதாரத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில் விவசாயிகள் ரூபாய் 90க்கு ஒரு கிலோ என்ற விலையில் எலுமிச்சம் பழம் விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் ரூ. 90க்கு ஒரு கிலோ எலுமிச்சம் பழம் விற்பனை செய்து வந்த நிலையில் திடீரென எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் ஒரு கிலோ எலுமிச்சம்பழம் ரூபாய் 170 க்கு நேற்று முன்தினம் முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் எழுமிச்சம் பழம் வாங்கச் சென்ற வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சிடைந்துள்ளனர். கோடை காலம் தொடங்கியதால் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டு எலுமிச்சம் பழத்தை விளைய வைப்பது என்பது மிகவும் கடினமான விஷயம் என்று விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால் மேலும் கோடை முடியும் வரை எலுமிச்சம்பழம் விலை உயரும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை கடுமையாக பாதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top