கோவை:திமுக துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து தொகுதி மறுவரையறையை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மசோத நகல் எரிக்கும் போராட்டம்!!!

sen reporter
0

கோவை துடியலூர் அரவான் திடல் பகுதியில் மத்திய அரசின் அஞ்சலகம் எதிரில் தி மு க துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாக நிறைவேற்றப்படும் மசோதாவை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும்மசோதநகல்எரிக்கும்போராட்டம்நடைபெற்றது. பாராளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பாக நிறைவேற்றப்படும் மசோதாவை கண்டித்து தி மு க கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தமிழகம் முழுவதும் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும், மசோத நகல்களை எரித்தும் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.இதன் ஒரு பகுதியாக தி மு க துடியலூர் கிழக்கு பகுதி சார்பாக கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து பகுதி கழக செயலாளர் அருள்குமார் தலைமையில் மசோதாவை கண்டித்து கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மசோத நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது.இதில் துடியலூர் தி மு க அலுவலகத்தில் இருந்து கருப்பு உடையணிந்தும், கையில் கருப்பு கொடி ஏந்தியும் மத்திய அரசிற்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்தனர். அரவான் திடல் பகுதியில் உள்ள மத்திய அரசின் அஞ்சல் அலுவலகத்தின் முன்பாக மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து மசோதவின் நகலை தீயிட்டு கொழுத்தினர்.வட்டக் கழக செயலாளர்கள் தமிழ் நிதி மற்றும் இமயவரம்பன் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர்கள் புஷ்பமணி அருள் குமார், சித்ரா தங்கவேல், தி மு க நிர்வாகிகள் ஆறுச்சாமி, சிடிசி சுப்பிரமணியன், ராமசாமி, நிதிஅரசு, சன் சோமு, வெற்றிச்செல்வன், அயூப் கான், ஜாஃபர் அலி, ரவி, மகளிர் அணி கோமதி, சிவநந்தினி தமிழ்நிதி, இளைஞர் அணி இம்ரான், சுபாஷ் கண்ணன், பரணிதரன், மனோஜ் குமார், கூட்டணி கட்சி தோழர்கள் காதர், தங்கவேல், காளிச்சாமி உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top