வேலூர்:ஆம்பூரின் வேட்பாளர் வெங்கடேசன் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரிப்பு!!!

sen reporter
0

தோல் பதனிடும் தொழிலுக்குப் பெயர்பெற்ற திருப்பத்தூர் மாவட்டத்தின் முக்கிய சட்ட மன்ற தொகுதியான ஆம்பூரில் தேர்தலில் விறுவிறுப்பான அரசியல் களமாக மாறியுள்ளது. இந்த தொகுதியின் வெற்றி நாயகனாக பொறியாளர் வெங்கடேசன் வலம் வருகிறார்.தொழிலாளர்கள், கல்வியாளர்கள், விவசாயிகளின் அனைத்து தரப்பு மக்களும் பொறியாளர் வெங்கடேசனை ஆவலோடு வரவேற்கின்றனர்.ஆளும் திமுக தரப்பில் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் அ.செ. வில்வநாதன், மூன்றாவது முறையாக மீண்டும் களம் காண்கிறார். இருமுறை வென்றாலும் அவரது குடும்பத்தினருடைய ஆதிக்கம், உள்ளாட்சி அமைப்புகளில் ஒரு குடும்பத்தினருடைய தலையீடு, தொழிற்சாலைகளில் அவருடைய ஆதரவாளர்கள் செய்த தகராறுகள் போன்றவை அவருக்கு எதிராக மாற்றி உள்ளது. தோல் தொழிற்சாலைகளிடம் கட்டாய நன்கொடை வசூல் போன்றவற்றால் தொகுதியில் அவருக்கு எதிரான நிலை நிலவுகிறது.இன்ஜினியர், கல்வியாளர், உள்ளாட்சி மன்ற பிரதிநிதி, ஜாதி மத பேதம் இன்றி அனைத்து மக்களிடம் அன்போடு பழகும் எளிமையான மனிதர் அதிமுக வேட்பாளர் வெங்கடேசனுக்கு ஆதரவான சூழல் நிலவுகிறது.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் முன்னாள் திமுக செயலாளர் அகரம்சேரி சண்முகத்தின் மகன் மாதனூர் ஒன்றிய சேர்மன் ப. ச. சுரேஷ் குமார் திமுகவிலிருந்து விலகி, அதிமுகவுக்கு ஆதரவான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஆம்பூர் இன்ஜினியர் வெங்கடேசனுக்கான நற்பெயரும், மாஜி அமைச்சர் கே.சி. வீரமணி தேர்தல் வேகமும், அகரம்சேரி சுரேஷ்குமார் களப்பணியும் ஆம்பூரில் வெற்றி நாயகனாக வெங்கடேசனை அழைத்துச் செல்கிறது.நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாகத் தேர்தல் களத்தைச் சந்திக்கும் வேளையில், இத்தொகுதியில் இம்தியாஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்களின் ஆதரவை இவர் பெரிதும் நம்பியுள்ளார்.நாம் தமிழர் கட்சி சார்பில் அஃப்சியா நஸ்ரின் .எஸ் போட்டியிடுகிறார். பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் வஜீர் அகமது ஜே மற்றும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் கரீம் பாஷா போன்ற 16 வேட்பாளர்களும் களத்தில் இருப்பதால், சிறுபான்மையின வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.ஆம்பூர் நகர மன்ற உறுப்பினர், பள்ளி நிர்வாகி, திமுகவில் களப்பணி, 30 ஆண்டுகளாக சமூக சேவை என்று பல்வேறு தனித் திறன்களைக் கொண்ட வெங்கடேசன் தேர்தல் களத்தில் காலை முதல் இரவு வரை அயராத பணியாற்றுகிறார்.செல்லும் இடங்களை எல்லாம் உற்சாகப்படுத்துகிறார்.வேட்பாளர் வில்வநாதனுக்கு எதிரான மக்களின் மனநிலையை தனக்கு சாதகமாக இருப்பது வெங்கடேசனுக்கு பிளஸ் பாயிண்ட். இருமுறை எம்எல்ஏவாக இருந்த வில்வநாதன் கடந்த கடைசி மூன்று ஆண்டுகளில் மக்களிடையே கடுமையான வெறுப்பை சம்பாதித்து உள்ளார் .

 மாதனூர் ஊராட்சி ஒன்றியம் ஆம்பூர் நகராட்சி என உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் அவரது உறவினர்களை வைத்து ஆதிக்கம் செலுத்தியதால் மக்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.தொழிற்சாலைகளுக்குள் அவருடைய ஆதரவாளர்கள் புகுந்து ரகளை செய்தது, மதிமுகவில் பல ஆண்டுகள் பயணித்து திமுகவுக்கு வந்தவர் உண்மையான திமுக விசுவாசிகளை ஓரங்கட்டியது, ஜாதி அரசியலில் ஈடுபட்டது, மத ரீதியான பாகுபாடுகள் வில்வ நாதனுக்கு எதிரான மனநிலையை திருப்தி உள்ளது.என்னதான் திமுக அரசு திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல நல்ல பெயரை பெற்றிருந்தாலும், வில்வநாதன், அவருடைய உறவினர்களின் கெடுபடியால் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவான சூழ்நிலை திரும்புகிறது.தொகுதியில் பெரும்பாலான மக்கள் வசிக்கும் இஸ்லாமியர்களும் முதலியார் சமூகத்தினரும் உள்ள நிலையில், அவர்களுக்கு கட்சியிலையோ, ஆட்சியிலையோ முக்கிய பொறுப்புகள் வழங்காமல் தான் சார்ந்த சமூகத்தினருக்கு பொறுப்புகள் வழங்கிய வில்வநாதனுக்கு பதிலடி கொடுக்க மக்கள் தயாராகி விட்டனர்.ஆம்பூருக்கு வில்லனாகி விட்டார் வில்வநாதன். ஹீரோ ஆகிவிட்டார் வெங்கடேசன்.தோல் தொழிற்சாலைகளின் டாலர் ஏரியா மக்களும், தொழிற்சாலை உரிமையாளர்களின், விவசாயிகளின் பாமர மக்களின் ஆதரவு பெற்ற வெங்கடேசன் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு செல்வது உறுதி என்கின்றனர் மக்கள்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top