வேலூரில் கோடைகால இலவச பயிற்சி முகாம் தொடக்கம்!!!

sen reporter
0

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான இலவச கோடைகால பயிற்சி முகாம் வேலூர் மாவட்ட விளையாட்டரங்கத்தில் தொடங்கியது. இதில் தடகளம், கால்பந்து, கபடி, கைப்பந்து, ஹாக்கி ஆகிய ஐந்து விளையாட்டுகள் நடைபெறுகிறது. இப்பயிற்சி முகாமில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், மாணவர் அல்லாத 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் என அனைவரும் கலந்து கொள்ளலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி பத்திரிகை செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் நேதாஜி ஸ்டேடியத்திற்கு நேரில் சென்று தங்களது பெயர்களை பதிவு செய்து கொண்டு பயிற்சி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top