வேலூர்:ஈஸ்டர் திருநாளில் சி. எஸ். ஐ. தேவாலயத்தில் திமுக வேட்பாளர் துரைமுருகன் வாக்கு சேகரிப்பு!!!

sen reporter
0

துன்பங்கள் போக்கி துணைநிற்க உயிர்த்தெழுந்த இயேசு கிறிஸ்துவை போற்றும் இனிய நாளில் காட்பாடியில் உள்ள சி. எஸ். ஐ. தேவாலயத்தில் மக்களுடன் இணைந்து கொண்டாடி மகிழ்ந்தார் திமுக காட்பாடி தொகுதி வேட்பாளர் துரைமுருகன். அப்போது தேவாலயத்தில் திரண்டிருந்த பொதுமக்களிடம் தனக்கு வழக்கம் போல் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அத்துடன் ஈஸ்டர் திருநாள் வாழ்த்துக்களையும் அங்கிருந்த பொதுமக்களுக்கு தெரிவித்து மகிழ்ந்தார் திமுக வேட்பாளர் துரைமுருகன். திமுக வேட்பாளர் துரைமுருகனுடன் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் ,காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னிய ராஜா மற்றும் திமுகவினர் உடன் இருந்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top