வேலூர்:காட்பாடி சட்டமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் துரைமுருகன் கோரந்தாங்கல் கிராமத்தில் வாக்கு சேகரிப்பு!!!
4/09/2026
0
திமுக பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சரரும் , காட்பாடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளருமான துரைமுருகன் கோரந்தாங்கல் கிராமத்திற்கு வருகை தந்து வாக்குகளை சேகரித்தார். திமுக வேட்பாளர் துரைமுருகனுக்கு முன் னாள் காட்பாடி யூனியன் கவு ன்சிலர், முன்னாள் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கோரந்தாங்கல் ஏ. .குமார், துரைமுருகனுக்கு ஆளுயர சாக்லெட் மாலை அணிவித்து வரவேற்றார். அவருடன் கிளைக் கழக செயலாளர்கள் ஜி.மணி, எம்.வேலு, என்.கபில்தேவ், என்.குமரன், எம். ராதாகிருஷ்ணன், எம். சிவஞானம், ஏ. ஏகாம்பரம், சுப்பிரமணி, சிவக்குமார், இ. ஏழுமலை, வி. யுவராஜ், எம்.ராஜாமணி, ஏ. சண்முகம், ஜி. அண்ணாமலை,குபேந்திரன், என். சுசீலா மற்றும் திமுகவினர், ஊர் பொதுமக்கள் திரளாக வந்து உதய சூரியனுக்கு வாக்குகளை சேகரித்தனர். கோரந்தாங்கல் கிராமம் விழாக்கோலம் பூண்டது குறிப்பிடத்தக்கது.
