திருவண்ணாமலை: செய்யாறு வெகு விமரிசையாக நடந்த செய்யாறு இந்தோ அமெரிக்கன் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா!!!

sen reporter
0



செய்யாறு இந்தோ - அமெரிக்கன் சி.பி.எஸ்.இ., பள்ளியின் ஆண்டு விழா மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. இப்பள்ளி உள்ள டாக்டர் ராமதாஸ் அப்பாய் அரங்கில் நடந்த விழாவிற்கு அறக்கட்டளையின் துணைத் தலைவர்இராதாகிருஷ்ணன் அப்பாய் தலைமை தாங்கினார்.மெட்ரிக் பள்ளியின் முதல்வர்அ.ப.சையத் அப்துல் இலியாஸ் முன்னிலை வகித்தார். மாணவப் பிரிதிநிதி மு.அஸ்வின் கிருஷ்ணா வருகை தந்த அனைவரையும் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக செய்யாறு வட்டார மருத்துவ அலுவலர்மருத்துவர் எ.சி.ஷர்மிளா, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.சி.பி.எஸ்.இ., பள்ளியின் முதல்வர் சுதா கார்த்திக், மெட்ரிக் பள்ளியின் துணை முதல்வர் க.கோவேந்தன், ஆசிரியர் பி. திவ்யா பரிசு பெற்ற மாணவர்களை வாழ்த்தி பேசினார்.ஆசிரியர்கள் அகல்யா, சக்திவேல், லட்சுமி, கவிதா, ஜமுனா, சரண்யா, திவ்யலட்சுமி மற்றும் அனைத்து ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.நிகழ்ச்சியை வெ.நிவேதாதொகுத்து வழங்கினார்.மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.மாணவப் பிரதிநிதி பாலகாமாட்சி நன்றி கூறினார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top