சென்னை:அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ.குரு அவர்களின் மகள் முதலமைச்சரை சந்திப்பு!!!

sen reporter
0

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று  அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி ஜெ.குரு அவர்களின் மகள் குரு.விருதாம்பிகை மற்றும் திருமிகு.குரு.விருதாம்பிகை அவர்களின் கணவரும் - ஜெ.குரு அவர்களின் மருமகனுமான காடுவெட்டி மனோஜ், பொருளாளர் ஆர்.பாலமுருகன், இணைச் செயலாளர் குடியாத்தம் பிரேம்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து, “ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி" நடைபெறவிருக்கும் 2026 சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி முழு ஆதரவு அளிப்பதாகவும், அனைத்து தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வெற்றிக்கு ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள் - தோழர்கள் முழுமையாக பாடுபடுவார்கள் என தெரிவித்தனர். அதுபோது கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தி தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.


Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top