திருவண்ணாமலை:செய்யாறு என்.சங்கர் எம்.கே. கார்த்திகேயனின் ஓராண்டு உழைப்பால் தி.மு.க.,வின் வெற்றியை நிர்ணயிக்கப் போவது வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம் தான்!!!
4/09/2026
0
வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என் சங்கர், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர் எம்.கே. கார்த்திகேயன் ஆகிய இருவரின் ஓராண்டு உழைப்பால், செய்யாறு தொகுதி தி.மு.க., வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்கப் போவது, வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம் தான் என, வேட்பாளர் ஜோதியின் நேற்றைய பிரச்சாரத்தின் போது மக்கள் பரவலாக பேசிக் கொண்டனர். செய்யாறு சட்டசபை தொகுதிக்கு உட்பட்டது வெம்பாக்கம் தி.மு.க.,வின் கிழக்கு ஒன்றியம். இங்கு ஒன்றிய செயலாளராக என்.சங்கர், மாவட்ட அயலக அணி துணைத் தலைவராக ஏழாச்சேரி எம்.கே.கார்த்திகேயன் இருந்து வருகின்றனர். இவர்களின் கடந்த ஒரு ஆண்டின் கட்சி தொடர்பான கடின உழைப்பு தற்போது மகத்தான 'அறுவடை' செய்யும் நிலையில் உள்ளது. புதிய உறுப்பினர்களை தி.மு.க.,வில் சேர்த்தல், மாற்றுக் கட்சியில் இருந்து தி.மு.க.,வில் இணைந்தவர்களை உற்சாகமாக வரவேற்றல், இங்குள்ள 40 கிராம மக்களுக்கு தேவையான சாலை, குடிநீர், தொகுப்பு வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுத்தது, எஸ்.ஐ.ஆர்., மூலம் தகுதி வாய்ந்த உறுப்பினர்களை, வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், விடுபட்ட வர்களுக்கு கலைஞரின் உரிமைத் தொகை, 'நான் முதல்வன்' திட்டத்தின் மூலம் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட ஏராளமான பணிகளை மேற்கண்ட இருவரும் செய்து முடித்துள்ளனர். இதேபோல் தி.மு.க.,வின் கட்சிப் பணிகளையும் இருவரது உத்தரவின் பேரில், மூத்தவர்கள் முதல் இளையவர்கள் வரை தொடர்ந்து செய்து வருகின்றனர். இதனால், வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியத்தைச் சேர்ந்த பெரும்பாலான வாக்காளர்கள் தங்களது வாக்குகளை உதய சூரியன் சின்னத்தில் வாக்களிக்க வரும் ( 23ம் தேதிக்காக ) காத்திருக்கின்றனர். இந்தப் பகுதிகளில்தான் செய்யாறு தி.மு.க., வேட்பாளர் ஜோதி வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். அனைத்து கிராமங்களிலும் பொது மக்கள், பெண்கள் ஒன்றிணைந்து, வேட்பாளர் ஜோதிக்கு ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். அப்பொழுது வேட்பாளர் ஜோதி பேசியதாவது; 'செய்யாறு தொகுதிக்குட்பட்ட வெம்பாக்கம் கிழக்கு ஒன்றியம் தி.மு.க.,வின் கோட்டையாகவே இருந்து வருகிறது. இதை உங்கள் சார்பிலும் நான் வரவேற்கிறேன். நல்லவர்கள் ஆட்சி செய்தால் 'மும்மாரி' மழை பெய்யும் என்று சொல்வார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்படித்தான் நடந்துள்ளது. செய்யாறு - பாலாற்றில் ஆண்டுதோறும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நீர்நிலைகளும் நிரம்பி வழிந்தன. இதனால், விவசாயமும் செழித்தது. எனக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள்; இவ்வாறு வேட்பாளர் ஜோதி பேசினார். இந்நிகழ்ச்சியில் தி.மு.க., பொறுப்பாளர்கள், கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், இளைஞர்கள் என, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
