வேலூர்:குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளர் பரிதா குடியாத்தம் நகரில் வாக்கு சேகரிப்பு!!!
4/07/2026
0
குடியாத்தம் தனித் தொகுதி அதிமுக வேட்பாளர் ஜி.பரிதாபுருஷோத்தமன் செவ்வாய்கிழமை (07-04-2026)காலை 8.30 ஆரம்பித்து ஜெ.ஜெ.,நகர், எம்.ஜி.ஆர்.நகர் , கலைஞர் நகர் , புதிய லைன், தரைக்காடு, சிவராஜ் நகர், அத்திப்பட்டி, டெலிபோன் ஆபீஸ் தெரு, பஜார் வீதி, சின்ன பஜார் வீதி, மாவு மிஷன் தெரு ஆகிய இடங்களில் தெருத் தெருவாக மக்களோடு மக்களாய் சென்று வாக்குகள் சேகரித்தார். பரிதா வாக்காளர்களிடம் பேசுகையில், இந்த குடியாத்தம் தொகுதிதான் எனக்கு கோயில். வாக்காளர்களாகிய நீங்கள்தான் எனக்கு தெய்வங்கள் என்று கூறி வாக்காளர்களின் மனங்களை தட்டி எழுப்பி அவர்களை கவர்ந்து தங்களது வாக்குகளை அதிமுக வேட்பாளரான எனக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியாக அளித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டு வீடுகள் தோறும் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு பரிதா கேட்டுக் கொண்டார். அவருடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள் சென்றனர்.
