திருவண்ணாமலை: செய்யார்தொகுதியின் அ.தி.மு.க.வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியன் மாட்டு வண்டியில் சென்று ஓட்டுக்களை சேகரித்தார்!!!
4/07/2026
0
செய்யாறு சட்டசபை தொகுதியின் அ.தி.மு.க., வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியன், நேற்று வயலூர் கிராமத்தில் மாட்டு வண்டியில் சென்று கிராம மக்களிடம் ஓட்டுக்களை சேகரித்தார். செய்யார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியன் தினமும் சுட்டெரிக்க வெயிலில் சென்று ஓட்டுக்களை சேகரித்து வருகிறார். அ.தி.மு.க., ஒன்றிய செயலாளான மாவட்ட பொருளாளர் சி.துரை, திருமூலன் ( எ ) பையாகுட்டி, வயலூர் ராமநாதன், ரங்கநாதன், மாவட்ட பொருளாளர் ஆலத்தூர் சுப்புராயன், நகர செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட அ.தி.மு.க., பொறுப்பாளர்கள் வேட்பாளர் குக்கர் சுப்பிரமணியனுடன் சேர்ந்து தீவிர வாக்கம் சேகரிக்கும் பணியில் தினமும் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வயலூர், அழிவிடைதாங்கி, குத்தனூர் உள்ளிட்ட 10 கிராமங்களில் ஓட்டுக்களே சேகரித்தனர். வயலூர் கிராமத்தில் வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியன் மாட்டு வண்டியில் சென்று கிராம மக்களிடம் ஓட்டுகளை சேகரித்தார். அழிவிடைதாங்கி கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு வேட்பாளர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்த அம்பேத்கர் சிலையில் கட்டுமான பணிகள் முழுமை பெறாமல் இருந்தது. இந்தப் பணியை நான், சொந்த செலவில் முழுமையாக கட்டி முடித்து தருகிறேன் என, கிராம மக்களிடம் வேட்பாளர் உறுதி அளித்தார். அழிவிடைதாங்கி கிராமத்தில் அடிப்படை வசதி பணிகளை செய்ய வேண்டும் என்றால், உங்களது அ..தி.மு.க.,வின் ஒன்றிய செயலாளர் வயலூர் ராமநாதபுரம் தெரிவியுங்கள் அவர் மூலமாக நான் தேவையான வசதிகளை செய்து கொடுக்கிறேன் என, வாக்காளர்களிடம், வேட்பாளர் முக்கூர் சுப்பிரமணியன் கூறினார்.
