கோவை:கோடைகாலகோகிளாம்சிறப்புவிற்பனைகண்காட்சிமே 8ந்தேதிதுவங்கிமூன்றுநாட்கள்ரெசிடென்சிடவர்ஓட்டலில்நடைபெறும்!!!

sen reporter
0

கோவை, மற்றும் அதன் சுற்றுப்புற, பகுதிகளில் உள்ள ஷாப்பிங் செய்யும் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பெரும் வரவேற்பை பெற்ற ‘கோ கிளாம்’ ஷாப்பிங் கண்காட்சி பதினோரு ஆண்டுகளுக்கும் மேலாக வெவ்வேறு பண்டிகை மற்றும் பல்வேறு சீசன்களில் தமது விற்பனை கண்காட்சியை நடத்தி வருகிறது.இந்நிலையில் கோடை கால விற்பனை கண்காட்சியாக கோவை அவினாசி சாலையில் உள்ள ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் கோ கிளாம் தமது சிறப்பு விற்பனை கண்காட்சியை துவங்கியது.மே 8,9,10 ந்;தேதி என மூன்று நாட்கள் நடைபெற உள்ள இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பரிசு பொருட்கள்,வீட்டு அலங்கார பொருட்கள் என நூறுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.மேலும் தங்கம் மற்றும் வெள்ளி நகை ஆபரணங்கள்,அழகான பேஷன் ஆடைகள் குறிப்பாக கோடை காலத்திற்கு ஏற்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பல்வேறு விதமான ஆடைகள் மற்றும் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.முன்னதாக,கோ க்ளாம் கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஹீனா மற்றும் ராகுல் தலைமையில் நடைபெற்ற கண்காட்சி துவக்க விழாவில்,சிறப்பு விருந்தினர்களாக,அனுபமா சிவம்,அகிலா கார்த்திக்,சாரு ரவிச்சந்திரன்,பவிகா துருவ் தேசாய்,விவி வினு ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கி வைத்தனர்.கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஹீனா மற்றும் ராகுல் ஆகியோர் ஷாப்பிங் கண்காட்சி குறித்து பேசுகையில்,இந்த ஆண்டு கோடை காலசிறப்பு விற்பனை கண்காட்சியாக துவங்கப்பட்டுள்ளதாகவும், ஷாப்பிங் செய்ய வருபவர்களுக்கு தேவையான சிறப்பு தள்ளுபடியுடன் அனைத்து பொருட்களுக்கான அரங்குகளும் இங்கு அமைக்கப்பட்டுள்ளதாகவும்,குறிப்பாக ரெசிடென்சி டவர் ஓட்டலில் நடைபெறும் கண்காட்சியில்,பார்வையாளர்கள் இலவசமாக அனுமதிக்கபடுவதாக தெரிவித்தனர்..பெண்கள் பயன்படுத்தும் இயற்கை முறையிலான அழகுக்கலை பொருட்கள், சிகை அலங்கார பொருட்கள், முக அலங்கார பொருட்கள், வாசனை திரவியங்கள் போன்றவற்றிற்கு தனி தனி அரங்குகள் அமைக்கப்பட்டு காட்சிப்படுத்தப் பட்டுள்ளதாகவும்,கோ கிளாம் ஒவ்வொரு சீசனிலும் கோவை,திருப்பூர்,ஈரோடு,நாமக்கல்,உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் வாடிக்கையாளர்கள் வந்து பொருட்களை ஆர்வமுடன் வாங்கி செல்வதாக தெரிவித்தனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top