வேலூர்:தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்க்கு தொழிற்கல்வி ஆசிரியர் வாழ்த்து பாராட்டு!!!

sen reporter
0

தமிழ்நாடு அரசின் புதிய முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் சி.ஜோசப் விஜய் பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறது.இது குறித்து மாநிலத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாடு அரசின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மாண்புமிகு சி.ஜோசப் விஜய்க்கு தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். முதல் அறிவிப்பாக வீட்டு மின் இணைப்புகளுக்கு 500 யூனிட் பயன்படுத்துவோருக்கு 200 யூனிட் வரை கட்டணமின்றி வழங்கப்படும் என்ற அறிவிப்பினையும், பெண்களுக்கான பாதுகாப்புக்கான சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, மற்றும் போதை பொருட்களுக்கு எதிரான சிறப்பு படை ஆகியவற்றை உருவாக்கப்படும் என அறிவித்துள்ள அறிவிப்பினை வரவேற்கின்றோம்.அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உழைக்கின்ற மக்கள் உள்ளிட்ட அனைவருக்குமான நல்லா இருப்போம் நல்லாகவே இருப்போம் என அறிவித்துள்ள பதவியேற்பு விழாவில் பேசிய முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவிப்புகளை வரவேற்கின்றோம்.  இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ள என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்டோருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.மேலும்· 1978-79ஆம் கல்வியாண்டு முதல் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்ட தொழிற்கல்வி பாடப்பிரிவு 11 மற்றும் 12ஆம் வகுப்பில் நடைமுறையில் இருந்த பாடங்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள் பணியிடம் காலியேற்பட்டால் அவை நிரப்பப் படாமல் அப்பள்ளியில் தொழிற்கல்வி பாடப்பிரிவு மூடப்படுவதால் மெல்ல கற்கும் மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பினை மறுக்கும் சூழல் ஏற்படுகின்றது. ஒரு முறைக்கு மேல் தோல்வி அடைந்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பொதுப்பாட பிரிவுகளிலோ, அறிவியல் பிரிவிலோ அல்லது கலை பிரிவிலோ சேர்க்கப்படுவதில்லை. இதனால் இந்த மாணவர்கள் உயர் கல்வி பெற இயலாத சூழல் ஏற்படுகின்றது. மேலும் பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர வேண்டும் என்று சொன்னால் அவர்கள் வெகு தொலைவுக்கு சென்று கல்வி பெறவேண்டிய தேவை ஏற்படுகிறது. எனவே மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒரு தொழிற்கல்விப் பாடத்தையாவது கட்டாய பாடமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். மேலும் மூன்று முறை சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட 128 ஆசிரியர்கள் அனைவருக்கும் தொழிற்கல்வி ஆசிரியராக பணி வரன்முறை செய்து முறையான காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top