வேலூர்:வாலாஜா வன்னிவேடு புத்த விஹாரில் புத்த பூர்ணிமா விழா குடியாத்தம் தலித்குமார் பங்கேற்பு!!!!
5/02/2026
0
பன்னாட்டு பௌத்த இளைஞர் சங்கம் தமிழ்நாடு கிளை சார்பில் வாலாஜா வன்னிவேடு பாலாற்றங்கரையில் அமைந்துள்ள புத்த விஹாரில் புத்த பூர்ணிமா (ஜெயந்தி) விழா நடைபெற்றது. மாநிலத் தலைவர் பொன். புருஷோத்தமன் தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கே.குசேலன் வரவேற்றார். அதன் பிறகு புத்த பூஜை மற்றும் தியானம் அனுஷ்டிக்கப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட எழுத்தாளர். கவிஞர். யாழன்ஆதி சிறப்புரையாற்றினார். சங்கத்தின் மூத்த தலைவர் பி. லோகநாதன், பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, இந்திய குடியரசு கட்சி கொள்கை பரப்பு செயலாளர் தன்ராஜ், மாவட்ட தலைவர் எஸ். தயாளன், பி. ஏகாம்பரம், வேலூர் மாவட்ட பொருளாளர் வெங்கடேசன், கே.சுசீந்திரன், பௌத்த சமூக கல்வி அறக்கட்டளை தலைவர் இரா.சி.தலித் குமார் மற்றும் சங்க நிர்வாகிகள், உபாசகர்கள், பெண்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் சங்க பொருளாளர் எஸ்.கருணாகரன் நன்றி கூறினார்.
