வேலூர்:காட்பாடிரெட்கிராஸ்சங்கம்சார்பில்2வதுநாளாகநீர்மோர்வழங்கல்!!!
5/02/2026
0
கடும் கோடை வெயில் காரணமாக காட்பாடி ரெட் கிராஸ் சங்கம் சார்பில் 2வது நாளாக நீர் மோர் வழங்கி பொதுமக்களை குளிர வைத்தனர். வேலூரில் கடும் வெயிலை பொதுமக்களுக்கும், பாதசாரிகளுக்கும் காட்பாடி ரெட் கிராஸ் சங்கமும், காந்திநகர் புத்து மாரியம்மன் ஆலய நிர்வாகிகளும் இணைந்து 2வது நாளான இன்றும் கத்திரி வெயில் முடிவடையும் நாளான மே 28ஆம் தேதி வரை தினமும் நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரை நீர் மோர் வழங்கும் நிகழ்வு 2வது நாளாக நடைபெற்றது. காட்பாடி காந்திநகர், தனபாக்கியம் திருமண மண்டப பேருந்து நிறுத்தம் புத்து கோயில் அருகில் நீர் மோர் வழங்கும் நிகழ்வு 2வது நாளாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு காட்பாடி ரெட் கிராஸ் சங்கத்தின் அவைத் தலைவர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் தனது 63வது பிறந்தநாளை முன்னிட்டு தொடங்கி வைத்தார். மேலாண்மைக்குழு உறுப்பினர் தணிகைசெல்வம், அமுதா, செயலாளர் எஸ்.எஸ்.சிவவடிவு, பொருளாளர் வி.பழனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட மேலாண்மை குழு உறுப்பினர் முனைவர். ஆர். சீனிவாசன், காட்பாடி அவை துணைத்தலைவர் ஆர்.விஜயகுமாரி, மருத்துவக் குழு தலைவர் டாக்டர். வீ.தீனபந்து, மேலாண்மை குழு உறுப்பினர்கள் நாராயணா தங்கவேல் நாடார், எஸ்.ரமேஷ்குமார் ஜெயின், ஆர்.ராதாகிருஷ்ணன், ஏ.ஸ்ரீதரன் ஜெயின், ஆனந்தகுமார், ஆர். சுதாகர், எஸ்.தன்வின், எஸ்.தைவிக், செ.ஜ.சோமசுந்தரம்,எம்.டீக்காராமன், எஸ்.பன்னீர்செல்வம், மனோகர், லக்ஷ்மணன், குமரவேல், பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.நகர பேருந்து ஓட்டுநர், நடத்துநர், பொதுமக்கள், நடைபாதையில் செல்வோர், வியாபாரிகள் உள்ளிட்ட இந்த சாலையை கடந்து சென்ற அனைவருக்கும் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை தொடர்ந்து இடைவிடாது நீர் மோர் வழங்கினர்.
