வேலூர்:காட்பாடி வி டி கே நகர் ரயில்வே கேட் மூடல் பராமரிப்பு பணிகள் தீவிரம்!!!
5/12/2026
0
காட்பாடி வி டி கே நகர் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே சமதளக் கடப்பு (Level Crossing), பராமரிப்புப் பணிகள் காரணமாக 12ம் தேதி முழுவதும் மூடப்பட்டுள்ளது.ரயில்வே பணியாளர்கள் அந்தப் பகுதியில் தண்டவாளப் பராமரிப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மாற்றுப் பாதையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இரவு பணிகள் நிறைவடைந்தவுடன் மீண்டும் போக்குவரத்து வழக்கம் போல் இயங்கிட அனுமதிக்கப்படும் என தென்னக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
