திருவண்ணாமலை: செய்யாறுஅனக்காவூர் கிழக்கு, மேற்கு ஒன்றியத்தில் எடப்பாடி பழனிசாமியின் 72வதுபிறந்தநாள் விழா!!!

sen reporter
0

 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அனக்காவூர் கிழக்கு - மேற்கு ஒன்றியத்தின் சார்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும் - செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் முக்கூர் சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி, ஞானமுருகன் கோவிலில் சிறப்பு அபிஷேகத்துடன் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்தநாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கோவில் வளாகத்தில் 108 தேங்காய் உடைத்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அனக்காவூர் கிழக்கு - மேற்கு ஒன்றிய செயலாளர்கள் சி.துரை, பையூர் சிவராஜ் ஆகியோர் ஏற்பாட்டில் இந்நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடந்தது. இந்நிகழ்ச்சியில் அ.தி.மு.க., நிர்வாகிகள், நகர செயலாளர் வெங்கடேசன், ஒன்றிய செயலாளர் அரங்கநாதன், மாவட்ட பொருளாளர் ஆலத்தூர் சுப்புராயன், பொதுக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அருணகிரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top