திருவண்ணாமலை:சாலை விபத்தில் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் மருத்துவமனைக்கு தானம்!!!

sen reporter
0

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் வசித்து வந்தவர் 36 வயதான மதன்குமார் குப்பன்ராஜ், நெடுஞ்சாலைத் துறையில் தட்டச்சுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தார் . அவர் மே மாதம் 17 அன்று இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது சறுக்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி , மே 21 அன்று இரவு 7 மணிக்கு அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தின்படி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது மனைவி பரிமளா இல்லத்தரசி. அவருக்கு ஏழு வயதுடைய ஒரு மகளும், நான்கு வயதுடைய ஒரு மகனும் உள்ளனர்.திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் வசித்து வந்தவர் 36 வயதான மதன்குமார் குப்பன்ராஜ், நெடுஞ்சாலைத் துறையில் தட்டச்சுப் பணியாளராகப் பணிபுரிந்து வந்தார் . அவர் மே மாதம் 17 அன்று இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது சறுக்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி , மே 21 அன்று இரவு 7 மணிக்கு அவர் மூளைச்சாவு அடைந்ததாக அறிவிக்கப்பட்டார். குடும்ப உறுப்பினர்களின் விருப்பத்தின்படி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. அவரது மனைவி பரிமளா இல்லத்தரசி. அவருக்கு ஏழு வயதுடைய ஒரு மகளும், நான்கு வயதுடைய ஒரு மகனும் உள்ளனர்.மூளைச்சாவு அடைந்த அவரது உடல் உறுப்புகள் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிஎம்சி மருத்துவமனை மற்றும் வேலூரில் உள்ள ஸ்ரீபுரம் ஸ்ரீ நாராயணி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையத்திற்கும் தானமாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இத்தகவலை வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் துரை ஜாஸ்பர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top