வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!!!
6/06/2026
0
வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் அடிப்படைத் தேவைகள் சரிவர செய்து தரப்பட்டுள்ளதா? பயணிகள் சிரமம் இன்றி வந்து செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளதா? கழிப்பறைகள் சுத்தமாக வைத்து பராமரிக்கப்படுகிறதா உள்ளிட்ட அடிப்படை தேவைகள் மற்றும் கட்டமைப்புகள் சரிவர உள்ளதா? என பேருந்து நிலையத்தை சுற்றி சுற்றி பார்வையிட்டு திடீர் ஆய்வு மேற்கொண்டார் வேலூர் மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ். அவருடன் பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர். அத்துடன் பேருந்து நிலையத்தில் உள்ள ஓடுதளம் மற்றும் கழிப்பறையை சுத்தமாக பராமரிக்க வேண்டும். குப்பைகள் சேரக்கூடாது. பேருந்து நிலையத்தில் உள்ள ஓடுதளத்தில் உள்ள பள்ளங்களை உடனடியாக அடைக்கவும் அவர் அப்போது உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
