நாகர்கோவில் வலம்புரிவிளையில் உள்ள மாநகராட்சி உரக்கிடங்கில் ரூ. 12 கோடி மதிப்பில் கழிவுநீர்ஊந்து நிலையத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மேயர் ரெ. மகேஷ் அடிக்கல் நாட்டினார்.
நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு பீச் ரோடு சந்திப்பில் உள்ள வல்லன்குமாரவிளையில் உள்ளது இங்கு கழிவுநீர் சுத்தப்படுத்தும் நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது .கழிவுநீர் சுத்தப்படுத்த நிலையத்துக்கு வரும் கழிவு நீர்களை உந்து படுத்தி தள்ளுவதற்காக ரூபாய் 12 கோடி மதிப்பீட்டில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் மகேஷ் புதிய உந்து நிலையத்திற்கான அடிக்கலை நாட்டினார்..
நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் மோகன் ஆனந்த் துணை மேயர் மேரிபிரின்சி லதா மண்டல தலைவர் அகஸ்டினா கோகிலவாணி மாமன்ற உறுப்பினர் ஜெய விக்கிரமன் மற்றும் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் பாபு, பிரபா ராமகிருஷ்ணன், வக்கீல் சதாசிவம். வக்கீல் அகஸ்தீசன், வேல்முருகன், ஆகியோர் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.