"ஒரே மாதிரியான குடியுரிமை சட்டம் (UNIFORM CIVIL CODE)"இந்திய அரசின் நோக்கமும் கடமையும்!
ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதை இந்திய அரசு ஒரு தீர்வாக கொண்டிருக்கிறது. என்பதே நாட்டின் பலதரப்பட்ட மக்களிடம் விவாத பொருளாகி வருகிறது. இதற்கு முக்கிய காரணம், தனிப்பட்ட மத சடங்குகளால் பல மத பெண்கள் முக்கியமாக இஸ்லாமிய பெண்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு கொண்டிருந்தனர். இந்திய அரசியலமைப்பின் மூலம் அவர்களுக்கு சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமைகளை நிலை நிறுத்துவதற்கு உச்சநீதிமன்றத்தின் கதவுகளே தட்ட தொடங்கியுள்ளதே, இந்த விவகாரத்திற்கு முக்கிய காரணமாகும்.
இதற்கு தீர்வு காணும் நோக்கத்தோடு மத்திய சட்ட அமைச்சகம் மேற்கண்ட யூனிஃபார்ம் சிவில் கோடு அமல்படுத்துவது தொடர்பான விஷயங்களை ஆய்வு செய்யுமாறு இந்திய சட்ட ஆணையத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த யூனிபார்ம் சிவில் கோடு இந்திய நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் மத சமூகத்தின் புனித நூல்கள் மற்றும் பழக்கவழக்கங்களின் அடிப்படையில் தனிப்பட்ட சட்டங்களுக்கு பதிலாக ஒவ்வொரு குடிமகனையும் ஆளும் ஒரு பொதுவான சட்டத் தொகுப்பை கொண்டு வருவதற்கு முன் வழிகிறது.
மேற்கண்ட இந்த சட்டத்தைப் பற்றி இந்திய அரசியலமைப்பில் கூறியுள்ளதாவது " இந்தியாவின் எல்லை முழுவதும் உள்ள குடிமக்களுக்கு ஒரே மாதிரியான குடியுரிமைச் சட்டத்தை பாதுகாக்க அரசு முயற்சி செய்யும்" என்று கூறியிருக்கிறது.
இந்த யூனிஃபார்ம் சிவில் கோட்டின் நன்மைகளில் முதலாவதாக அனைத்து குடிமக்களுக்கும் சட்டரீதியில் சம்மந்தஸ்து வழங்கப்பட வேண்டும். இரண்டாவதாக, இந்த நவீன யுகத்தில் ஒரு மதசார்பற்ற ஜனநாயக குடியரசு, அதன் குடிமக்களுக்கு அவர்களின் மதம், பிரிவு, சாதி, பாலினம் போன்றவற்றை பொருட்படுத்தாமல், பொதுவான சிவில் மற்றும் தனிப்பட்ட சட்டங்களை கொண்டிருக்க வேண்டும் என்பதையும். மூன்றாவதாக பாடின சமத்துவத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று குறிக்கோளையும், நான்காவதாக, எல்லா மதங்களின் தனிப்பட்ட சட்டங்களும், பெண்களிடம் பாரபட்சமாக இருப்பது என்பதை இன்றுவரை நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இதை மாற்றி,பெண்களுக்கு பாரபட்சம் அற்ற நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதையும், மேலும் வாரிசு மற்றும் பரம்பரை விஷயங்களில், பொதுவாக ஆண்களுக்கு அதிக முன்னுரிமை மற்றும் அந்தஸ்து வழங்கப்படுகிறது. இந்த சிவில் சட்டம் மூலம், ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் சமநிலைக்கு கொண்டு வரலாம் என்று நம்பப்படுகிறது. அதாவது இந்திய மக்கள் தொகையில் 25 வயது உட்பட்ட இளைஞர்கள் 55 சதவிகிதம் பேர் உள்ளனர். அவர்களின் சமூக அணுகுமுறைகள் மற்றும் நம்பிக்கைகளாக சமத்துவம் மனிதநேயம் மற்றும் நவீனத்துவம் ஆகியவற்றின் உலகளாவிய மற்றும் தேசிய கொள்கைகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கோணத்தில் உள்ளனர். தேசத்தை கட்டி எழுப்புவதற்கு அவர்களின் முழு திறனையும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு மதத்தின் அடிப்படையிலும் அவர்களின் அடையாளத்தை அகற்றுவது பற்றி அவர்களின் பார்வையை தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே இந்த யூனிபார்ம் சிவில் கோட்டின் தத்துவமாகும்.
இதன் மூலமே தேசிய ஒருமைப்பாட்டையும் இந்திய இறையாண்மைக்கு ஆதரவையும் மேம்படுத்த முடியும்.
இறுதியாக, குற்றவியல் சட்டங்கள்மற்றும் பிற சிவில் சட்டங்கள் ( தனிப்பட்ட சட்டங்கள் தவிர ) அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டம் இருப்பதால் இந்திய குடிமக்கள் அனைவரும் ஏற்கனவே நீதிமன்றத்தின் முன் சமமாக உள்ளனர் இந்த ஒரே மாதிரியான குடியுரிமை சட்டத்தை அதாவது யூனிபார்ம் சிவில் கோடை அமல்படுத்துவதன் மூலம் அனைத்து குடிமக்களும் ஒரே மாதிரியான சட்டங்களை பகிர்ந்து கொள்வார்கள் என்பதே இதன் நோக்கம் ஆகும்.