3 வயது குழந்தை பள்ளி வாகனத்தில் இருந்து கடத்தப்பட்டிருப்பதாக தக்கலை காவல் நிலையத்தில் புகார்

sen reporter
0

 பெற்றோர் இடையே ஏற்பட்ட மன விலகல் காரணமாக. 3 வயது  குழந்தை பள்ளி வாகனத்தில் இருந்துகடத்தப்பட்டிருப்பதாக தக்கலை காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.



கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர் விபின் இவர் தக்கலை அருகே உள்ள பிலாவிளை பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவரை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்தார் .இவர்களுக்கு ஆதிக் என்ற  3 வயதுகுழந்தை உள்ளது .இந்நிலையில் கணவன் மனைவி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியா கணவனைப் பிரிந்து தனது தந்தை வீடான  பிலாவிளையில் தற்போது வசித்து வருகிறார் . தற்போது பிரியா தனது மகனை தக்கலை அருகில் மேக்கா மண்டபம் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் சேர்த்துள்ளார் வழக்கம் போல் குழந்தை ஆதிக் பள்ளி வாகனத்தில் இன்று (27)காலை சென்றுள்ளார். 

பள்ளி வாகனம் தக்கலை அடுத்துள்ள சாமி விளை பகுதியில் செல்லும் போது இரண்டு வானத்தில் வந்த எட்டு பேர் கொண்ட கும்பல் பள்ளி வாகனத்தை வழி மறைத்து குழந்தை ஆதிக்கை கடத்தி சென்றுள்ளனர் .இது தொடர்பாக பள்ளி வாகன ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தல் கும்பலை தேடி வருகின்றார்கள் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பிரிந்திருப்பதால் குழந்தையின் தந்தையே கடத்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது இந்நிலையில் கடத்தப்பட்ட குழந்தை உடனடியாக மீட்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்ஹரி கிரண் பிரசாத் தனிப்படை அமைத்து தேடல் பணியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார் . பள்ளி வாகனத்தில் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம்  தக்கலைப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது  .

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top