நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட 52 வார்டுகளில் ஆய்வு மேற்கொண்டு முடித்த நிலையில் இன்று (27) காலை 31 வது வார்டுக்கு உட்பட்ட மேலராமன்புதூர் தளவாய்புரம் ஆகிய பகுதிகளில் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரும் மேயருமான ரெ .மகேஷ்
ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டு அறிந்து அங்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் உடனடியாக சீர்செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் ஆய்வின் போது மாநகராட்சி ஆணையர் மோகன் ஆனந்த், 31 வது வார்டு உறுப்பினர் சோபி மண்டல தலைவர் ஜவகர் பகுதி பொறுப்பாளர் ஷேக் மாநில பேச்சாளர் வில்பர்ட் மாநகரத் துணைச் செயலாளர் வேல்முருகன் தொண்டரணி எம் ஜே ராஜன் ஆகியோர் உட்பட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்