குருந்தன்கோடு வட்டார சிறுபான்மையினர் கூட்டமைப்பு அவசர ஆலோசனைக் கூட்டம் திங்கள்நகர் சி.பி.ஐ(எம்) லெனினகம் அலுவலகத்தில் வைத்து குருந்தன்கோடு வட்டார சிறுபான்மையினர் கூட்டமைப்பு துணைச்செயலாளர் தா.ஜெபராஜ் தலைமையில் நடைபெற்றது. அனைத்து கட்சி கூட்டத்தில்
மணிப்பூரில் மனித மாண்புக்கு இறையாண்மைக்கும் எதிராக நடைபெறும் மதவெறித் தாக்குதல்களை குருந்தன்கோடு வட்டார சிறுபான்மையினர் கூட்டமைப்பு சார்பாக வன்மையாகக் கண்டிப்பதோடு வருகின்ற 05ம் தேதி புதன்கிழமை காலை 10:00 மணி அளவில் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மதவெறி தாக்குதலை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட அனைத்து சிறுபான்மையினர் கூட்டமைப்பு தலைவர் பாஸ்டர்.ஞானதாசன் தலைமையில் ,
பொதுச்செயலாளர் மீரான்மைதீன் முன்னிலையில் அனைத்து கட்சிகளும் சேர்ந்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. மேலும். மணிப்பூரில். உயிர்களையும், உறவுகளையும்,உடைமைகளையும் இழந்து வாடும் அத்தனைப் பேருக்கும் ஆறுதல் கூறுவதோடு
இக்கலவரத்தில் உயிர் தியாகம் செய்த அணைத்து சகோதர,சகோதரிகளுக்கும்
குருந்தன்கோடு வட்டார சிறுபான்மையினர் கூட்டமைப்பு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் சி.பி.ஜ(எம்) ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் புஷ்பதாஸ்,வழக்கறிஞர் அலெக்ஸ்,
திங்கள்நகர் பேரூர் காங்கிரஸ் கட்சி தலைவர் வி.ஜெமினிஷ்,
மாவட்ட தி.மு.க சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணை அமைப்பாளர் எம்.ஜெரோம்பெனடிக்ட், பேராயர்.என்.சோனா ,சி.பி.ஐ(எம்) எம்.மேரிஎஸ்தர்ராணி,
ஓய்வு ஆசிரியர் எஸ்.தேவராஜ், திங்கள்நகர் கிளைச் செயலாளர் சி.பி.ஐ(எம்) லாசர்,
திங்கள்நகர் எஸ்.கருணாநிதி,மாவட்ட ஆதிதிராவிடர் அணி துணைத் தலைவர் ப.விஜயகுமார்,
மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் எல்.ரெத்தினராஜ்,
.மேரி,அபிஷேக்,ராஜு,ஜெயகுமார் மற்றும் கூட்டணி கட்சினர் கலந்துகொண்டனர்.