கன்னியாகுமரி அருகே அரசு மேல் நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவி விஜிலா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவரை மீண்டும் ஏழாம் வகுப்பிற்கு ஆசிரியர்கள் அனுப்பியதால் மனம் உடைந்த மாணவி தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சி மேற்கொண்டுள்ளார். தற்போது அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவரிடம்
கன்னியாகுமரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவிக்கு மாத்திரை எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை தீவிரமாக்கப்பட்டுள்ளது.