தாய் பாசத்துக்கு நிகர் எதுவுமில்லை என்பார் தன் வயிற்றை பட்டியாக போட்டு குழந்தைகளுக்கு அமுதூட்டுவாள் தாய் இது இதிகாசகாலம் முதலாக நடந்தாலும் இந்த கலி காலத்திலும் இப்படியோர் நிகழ்வு நிகழ்ந்துள்ளது. மகளுக்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்தநிலையில் தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கி தாய் ஒருவர் மெய்சிலிக்க வைத்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒன்றை வருடமாக இரண்டு சிறுநீரகம் செயலிழந்த நிலையில் தொடர் ரத்த சுத்திகரிப்பு செய்து வந்தார் தக்கலை பகுதியை சேர்ந்த ஜீவிதா (வயசு 31) . இன்நிலையில் மகள் ஒவ்வொரு முறை ரத்தம் சுத்திகரிப்பு செய்யும் போது படும் துயரை கண்ட அவருடைய தாயார் தினகூலி யாளராக வேலைபார்க்கும் சார்லட் தன்னுடைய சிறுநீரகத்தை தானமாக வழங்கினார். அதற்கான முழு உடல் பரிசோதனையும் செய்யப்பட்டு அரசு மருத்துவ குழுவினரால் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.தனியார் மருத்துவமனையில் 10 லட்சம் வரை செலவாகும் அறுவை சிகிச்சை தமிழக அரசின் மருத்துவ காப்பீடு மூலம் இலவசமாக செய்ய பட்டது. இந்த சம்பவம் மூலம் தாய்மையால் எல்லோராலும் மதிக்கப்பட்ட அவரை ஆட்சி தலைவர் பிஎன்ஸ்ரீதர் நேரில் சந்தித்து வாழ்த்து கூறி நெகழ்ச்சியடைந்தார்.