நாகர்கோவில் மாநகராட்சியில் ₹86.80 மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகளை மேயர் மகேஷ் துவக்கி வைத்தார்.
நாகர்கோவில் மாநகராட்சி
30-வது வார்டுக்குட்பட்ட கமலா தெரு வெள்ளாளர் மேல தெரு, சிதம்பரநாதர் தெரு பகுதியில் ₹80.70 இலட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் மற்றும் பழுதுபட்டுள்ள தார் சாலை மறுசீரமைக்கும் பணி மற்றும் 39-வது வார்டுக்குட்பட்ட பாவாகாசீம் கொத்துபா பள்ளி முன்பு ₹6.10 இலட்சம் மதிப்பீட்டில் அலங்கார தரை கற்கள் பதிக்கும் பணிகளை நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ மகேஷ் துவக்கி வைத்தார். உடன் துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மண்டல தலைவர் செல்வகுமார், மாமன்ற உறுப்பினர்கள் சந்தியா, பாத்திமா ரிஸ்வானா, மாநகர இளநிலை பொறியாளர் ராஜா, தொழில்நுட்ப உதவியாளர் ரவி, இராஜாக்கமங்கல ஒன்றிய துணைப் பெருந்தலைவர் சரவணன், அகஸ்தீசன்,
வட்டச் செயலளார் சுரேஷ் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்