சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவிப்பு!

sen reporter
0

 சென்னையில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ. கட்சியின் 2023 ஆம் ஆண்டின் தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கும் விழா!சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவிப்பு!


எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக சிறந்த ஆளுமைகளை கௌரவிக்கும் விதத்திலும், ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் உரியவர்களை தேர்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கி கெளரவித்து வருகின்றது. அந்த அடிப்படையில் இந்த ஆண்டும் (2023) சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கெளரவிக்கும் விழா சென்னை பிராட்வே சாலையில் உள்ள ஹயாத் மஹாலில் நேற்று (ஜூன்.24) மாலை நடைபெற்றது.

எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ்ச்சுடர் விருதுகளை வழங்கி கெளரவித்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக சிறுபான்மை நல ஆணைய தலைவர் திரு. பீட்டர் அல்ஃபோன்ஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும், வடசென்னை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கலாநிதி வீராசாமி, திராவிடர் கழக பொருளாளர் வீ குமரேசன் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர்கள் அச.உமர் பாரூக், நிஜாம் முகைதீன், மாநில அமைப்பு பொதுச்செயலாளர் நஸூருத்தீன், மாநில பொருளாளர் அமீர் ஹம்சா, மாநில செயலாளர்கள் ரத்தினம், ஏ.கே.கரீம், அபுபக்கர் சித்திக், மாநில செயற்குழு உறுப்பினர்கள் பஷீர் சுல்தான், முகமது ரஷீத், ஷபீக் அகமது, முஜிபுர் ரஹ்மான், வர்த்தகர் அணி மாநில தலைவர் கிண்டி அன்சாரி, எஸ்.டி.டி.யூ. மாநில தலைவர் முகமது ஆசாத், ஆல் இந்தியா லாயர்ஸ் கவுன்சில் மாநில பொதுச்செயலாளர் வழ.ராஜா முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்ட தலைவர்கள் ஜூனைத் அன்சாரி, வழ.முகமது உசேன், புஸ்பராஜ், சீனி முகமது, முகமது பிலால், சலீம், செய்யது அஹமது, முகமது சலீம், மாலிக், ஜூபைர் அலி, ஜாஃபர் ஷெரீப் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவின் முக்கிய நிகழ்வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தமிழ்ச்சுடர் விருதுகள் வழங்கப்பட்டன. அதன்படி கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் விருதினை திமுக தலைமைக் கழகச் செய்தி தொடர்புக்குழு தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. டி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கும், தந்தை பெரியார் விருதினை திரைப்பட இயக்குநர் திரு.வெற்றிமாறன் அவர்களுக்கும், டாக்டர் அம்பேத்கர் விருதினை தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் வழக்கறிஞர் திரு. நாகை திருவள்ளுவன் அவர்களுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருதினை கல்வியாளரும், மைசூர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் லெ.ஜவஹர் நேசன் அவர்களுக்கும், புரட்சியாளர் பழனிபாபா விருதினை தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான திரு. தி.வேல்முருகன் அவர்களுக்கும், கவிக்கோ விருதினை மூத்த எழுத்தாளர் திரு. ஜே.எம்.சாலி அவர்களுக்கும், ஐயா நம்மாழ்வார் விருதினை மேட்டுப்பாளையத்தை சேர்ந்த காட்டுயிர் ஆர்வலர் திரு. முகம்மது அலி அவர்களுக்கும், அன்னை தெரசா விருதினை சென்னை திருவொற்றியூரை சேர்ந்த சமூக சேவகர் திரு. அலி பாஷா அவர்களுக்கும், சயீத் சாஹிப் விருதினை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மூத்த களப்போராளி வேலூரை சேர்ந்த டாக்டர் திரு.ஆ.சே.மு. ஷேக் மீரான் அவர்களுக்கும் எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் வழங்கி கெளரவித்தார்.

இவ்விழாவில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

விருதுகளை வழங்கி உரையாற்றிய எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், “கடந்த 2017ம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும் மிகச்சிறந்த ஆளுமைகள், துறை சார்ந்த சேவையாளர்கள் ஆகியோரை தேர்ந்தெடுத்து தலைவர்களின் பெயரில் விருதுகளை வழங்கி எஸ்.டி.பி.ஐ. கட்சி கெளரவித்து வருகின்றது. ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக போராடிய அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பெயரால் விருது, அரசியல் நிர்ணய சபையில் இந்தியாவின் ஆட்சி மொழியாக வரக்கூடிய தகுதி, ஒரே மொழியான தமிழ் மொழிக்கு தான் உண்டு என உரத்து முழங்கிய கண்ணியமிகு காயிதே மில்லத் பெயரில் விருது, சமூக நீதிக்கு வழிகாட்டிய, இந்தியாவிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்த தந்தை பெரியார் பெயரில் விருது, கல்விக்கு கண் தந்தவர் மட்டுமல்ல, தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வாக தொலைநோக்கு பார்வையோடு அணைகளை கட்டிய காமராஜர் பெயரில் விருது, இயற்கைக்காக போராடிய இயற்கை விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் பெயரால் விருது, தமிழுக்கு மிகச்சிறந்த கவிதைகளை தந்த கவிக்கோவின் பெயரால் விருது, இன்றைக்கு இருக்கக்கூடிய பாசிச பயங்கரவாதம் என்னவென்று தெரியாத அந்த காலக்கட்டத்தில் அதைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திய பழனி பாபா பெயரில் விருது, மனிதநேயத்திற்கு முன்னுதாரணமாக திகழ்ந்த அன்னை தெரசாவின் பெயரில் விருது என்று, ஒரு கொள்கைவாதிகளை கௌரவிக்கும் விதமாகத்தான் எஸ்.டி.பி.ஐ. கட்சி விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டு முதல் ஒடுக்கப்பட்ட சமூக மக்களின் அரசியல் எழுச்சிக்காகவும், சமூக நீதிக்காகவும் தன்னை அர்ப்பணித்து களம் கண்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் மறைந்த சயீத் சாஹிப் அவர்களின் பெயராலும் விருது வழங்கப்பட்டுள்ளது.


அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டு, இவர்களது சேவை சமூகத்துக்கு தேவை என்பதை உணர்ந்தே சிறந்த ஆளுமைகளுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி விருதுகளை வழங்கி கெளரவித்து பாராட்டி வருகின்றது. நாடு இருக்கும் சூழலில் இந்த ஆளுமைகளின் சேவைகள் இந்த நாட்டிற்கு மென்மேலும் தேவை என்பதை வலியுறுத்தும் விதமாவும், அவர்கள் மென்மேலும் பணி செய்ய வேண்டிய கடமை உள்ளது என்பதை வலியுறுத்தியும் இந்த விருதினை நாங்கள் வழங்குகின்றோம். அந்த நம்பிக்கையை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என நாங்கள் நம்புகின்றோம். விருது பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றார்.

இந்நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.



Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top