காலாவதியான தீயணைப்பான்களால் அரசை ஏமாற்றும் தனியார் நிறுவனங்கள்!
தேனியில் உள்ள பொம்மையகவுண்டன்பட்டி முதல் அன்னஞ்சி வரை இருசக்கர, மூன்று சக்கர வாகன தனியார் நிறுவனங்கள் பெரும்பாலும் இப்பகுதியில் அதிகமாக காணப்படுகிறது. காலாவதியான தீயணைப்பான்களை கொண்டு இந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்கள் செயல்படுவதால் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அச்சஉணர்வுடன் வந்து செல்வது வாடிக்கையாகவே காணப்படுகிறது.
தொழிலாளர் நலன்களில் அக்கறை இல்லாமல் எவன் செத்தா எனக்கென்ன என்ற ஆணவப்போக்குடன் காலாவதியான தீயணைப்பான்களை வைத்துக்கொண்டு தனியார் நிறுவன முதலாளிகள் செயல்படுவது கேலிக்கூத்தாகிறது. மேலும்,தீயணைப்பு துறையினரும் ஆய்வு மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பது தொழிலாளர்கள் மத்தியில் அதிர்ச்சி அளிக்கிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சுக்குவாடன்பட்டியில் ரிலையன்ஸ் பெட்ரோல் பங்க் எதிரே தீவிபத்து ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக அருகில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கும் தொழிலாளருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. இதுகுறித்து பலமுறை தேனி மாவட்ட தீயணைப்பு அலுவலர் பார்வைக்கு வைத்தும் கண்டும், காணாமலும் இருப்பதால் தீயணைப்பு துறையின்மேல் நம்பிக்கை இழந்துள்ளனர் இப்பகுதி தொழிலாளர்கள்.
தனியார் நிறுவனங்களில் தீயணைப்பான்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா என ஆவலுடன் எதிர்பார்க்கும் தொழிலாளர்களின் மத்தியில் நம்பிக்கை அளிப்பார்களா தீயணைப்பு துறையினர்.