கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கிளியூர் கிராமத்தில் இன்று தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் கிளியூர் ஆரம்ப சுகாதார மருத்துவமனை மருத்துவர் கதிரவன் தலைமையில் மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய பெருந்தலைவர் ப.ராஜவேல் மாவட்ட கவுன்சிலர் பிரியாபாண்டியன், கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கினார்.
இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் ஒன்றிய கவுன்சிலர் ஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர் அலமேலுபாலு , ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சிலம்பரசன், குன்னத்தூர் ஒன்றிய கவுன்சிலர் ஆறுமுகம் கிளியூர் குமரவேல், E.தேவநாதன் ,பெ.ப.சீனு ரகுநாதபுரம் திமுக கிளை கழக செயலாளர் ஜானகிராமன் , கிளியூர் காலனி கிளை கழக செயலாளர் U.வெங்கடேசன் , திமுக பிரதிநிதி A.பெருமாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்