மருந்தியல் கல்லூரியில் போதிய அளவு பேராசிரியர்கள் இல்லாததால் அங்கு பயிலும் மாணவர்களுக்கு சரியாக வகுப்புகள் எடுக்க பேராசிரியர்கள் இல்லை.அரசு நடவடிக்கை எடுக்குமா?
தமிழக அரசின் சார்பில் மருந்தியல் கல்லூரி(college of pharmacy)சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் மருந்தியல் கல்லூரி(college of pharmacy)மதுரை மருத்துவக்கல்லூரிஇந்த இரண்டு மருத்துவ,மருந்தியல் கல்லூரிகளிலும் பட்டப்படிப்பு(B.Pharm) மற்றும் பட்ட மேற்படிப்பு(M.Pharm) போன்ற படிப்புகள் நடைபெற்றுகொண்டிருக்கிறது.தஞ்சை மருத்துவக்கல்லூரி மற்றும் கோவை மருத்துவக்கல்லூரி பட்டயப்படிப்பு(D.Pharm) நடைபெற்றுக்கொண்டுள்ளது.
Total number of students
College of Pharmacy, Madras Medical College
B.Pharm -258
M.Pharm- 80
COP, Madurai Medical College
B.Pharm- 258
M.Pharm- 90
D.Pharm- 240
Thanjavur Medical College
D.Pharm -120
Coimbatore Medical College
D.Pharm -120
மருந்தி யல் கல்லூரி(college of pharmacy)சென்னை மருத்துவக்கல்லூரியில் மொத்தம் உள்ள 4பேராசிரியர்கள் பணியிடங்களில் 2பேராசிரியர் பணியிடங்கள் 4ஆண்டுகளுக்கு மேலாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளது(Professor &HOD in pharmaceutical chemistry &principal)பதவி ஓரான்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக உள்ளது.சார்பு பேராசிரியர்கள் பணியிடங்கள் மொத்தம்7, அதில் 6சார்பு பேராசிரியர்கள் பணியிடங்கள் சுமார் 10ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ளது.மருந்தியல் கல்லூரி-மதுரை மருத்துவக்கல்லூரியில் மொத்த சார்பு பேராசிரியர் எண்ணிக்கை7அதில் 6சார்பு பேராசிரியர் பணியிடங்கள் 10ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ளது.தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பேராசிரியர் பணியிடம் 1இருந்தும் அந்த ஒரு இடமும் 10ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ளது.கோவை மருத்துவக்கல்லூரியிலும் 1இடம் இருந்தும் தற்போது காலியாகவே உள்ளது.இதனை கருதி காலியாக உள்ள இடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பப்பட வேண்டுகிறோம். 9 பேராசிரியர்களின் இடங்களில் 5இடங்கள் காலியாகவும்,சார்பு பேராசிரியர்கள் 18இடங்களில் 16இடங்கள் காலியாகவும் உள்ளதை போர்க்கால அடிப்படையில் யி இந்திய மருந்தியல் குழுமம் வகுத்த கல்வித்தகுதியின் அடிப்படையில் நிரப்பிட வேண்டுகிறோம்.