குமரி மாவட்டம் வழியாக கேரளாவிற்கு தினமும் ரேசன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. இங்கு விலையில்லாஅரிசியை பெறும் பொதுஜனங்கள் கிலோ 5 ரூபாய்க்கு கள்ள சந்தை வியாபாரிகளிடம் விற்பனை செய்து விடுகின்றனர்.ரேசன் அரிசியை வாங்கும் கேரள வியாபாரிகள் அதை தீட்டி கிலோ 50 முதல் 60 ரூபாய்க்கு பொதுமக்களுக்கு விற்று விடுகின்றனர், கடந்த வாரம் கூட கன்னியாகுமரி அடுத்துள்ள கோவளம் கடற்கரை கிராமத்தில் 1 டன் எடை கொண்ட அரிசி மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில்
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் ராஜசேகர் தலைமையில் அதிகாரிகள் கருங்கல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சென்னை பதிவு எண் கொண்ட சொகுசு காரை சோதனைக்காக நிறுத்தினர். கார் நிற்காமல் வேகமாக சென்றுவிடவே உசாராண அதிகாரிகள் வாகனத்தை 15 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். அதிகாரிகளை கண்ட கார் ஓட்டுனர்.காரை விட்டு விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டார்.(வழக்கம் போல்) அதிகாரிகள் வாகனத்தை சோதணை செய்தபோது அதில் கேரளாவிற்கு கடத்த முயன்ற ஒரு டன் ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. பின்னர் அதிகாரிகள் அரிசி மூடைகளை கைப்பற்றியதோடு காரையும் பறிமுதல் செய்தனர்.