நாமக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் எதிர்ப்பு தின உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் ச. உமா தலைமையில் அரசுத்துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர் .குடி மற்றும் போதை பொருட்களை நான் உபயோகிக்க மாட்டேன் எந்த ஒரு நோக்கத்திற்காகவும் எந்த வகையிலும் தீங்கு விளைவிக்கும் அல்லது சட்டவிரோதமான மருந்துகளை உட்கொள்ள மாட்டேன் இல்ல தலைமுறையினரிடம் குடி மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளை எடுத்துச் சொல்லி அவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன் குடி மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களிடமும் அவரது குடும்பத்தினரிடமும் பேசி பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைகளில் உள்ள மனநல பிரிவுக்கு அழைத்துச் சென்று குடி மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையான நிலையில் இருந்து விடுபட சிகிச்சை எடுத்துக் கொள்ள சொல்லி ஆலோசனை கூறுவேன்.
சமூகத்தின் போதை பொருட்கள் இல்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவேன் இளைஞர்கள் போதைப் பொருள்கள் இல்லாமல் வாழவும் அவர்கள் ஆக்கபூர்வமான மற்றும் முக்கிய உறுப்பினர்களாகவும் மாறவும் தேவையான ஆலோசனையை மேற்கொள்வேன் போதைப் பொருட்கள் இல்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் வாசிக்க அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் பின்தொடர்ந்து உறுதி மொழியில் ஏற்றுக்கொண்டனர் முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் எதிர்ப்பு தின பேரணி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் பிரபாகரன் மாவட்ட மேலாளர் டாஸ்மார்க் கமலக்கண்ணன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஷ் குமார் உட்பட அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்