கன்னியாகுமரி மாவட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீட்டுத் திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் .பி.என்.ஸ்ரீதர், தலைமையில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் .எச்.ஆர்.கௌசிக், முன்னிலையில் திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட பொன்மனை அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று (24.) நடைபெற்றது. இம்முகாமினை பால்வளத்துறை அமைச்சர் .த.மனோ தங்கராஜ் குத்துவிளக்கேற்றி, பயனாளிகளுக்கு காப்பீட்டுத்திட்ட அட்டைகளை வழங்கினார் பின்னர் விழாவில் அவர் , பேசும்போது -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற கடந்த இரண்டு ஆண்டுகளில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் மற்றும் அவர்களுக்கு தேவையான வளர்ச்சி திட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், இல்லம்தேடி கல்வி, புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பா செயல்படுத்தி வருகிறார்கள்.
அதன்ஒரு பகுதியாக முத்தமிழறிஞர், உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை நினைவு கூறும் வகையில் இன்று(25) தமிழ்நாட்டிற்குட்பட்ட 100 இடங்களில் இலவச பன்னோக்கு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் கோட்டார் கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்குட்பட்ட கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவட்டார் வட்டத்திற்குட்பட்ட பொன்மனை அரசு உயர்நிலைப்பள்ளி, விளவங்கோடு வட்டத்திற்குட்பட்ட பரக்குன்று புனித ஜேம்ஸ் மேல்நிலைப்பள்ளி ஆகிய நான்கு இடங்களில் இலவச பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போதுள்ள வாழ்வியல் மாற்றத்தினால் யாருக்கு என்ன நோய் எப்போது வருகிறது என்பதை கணிப்பதை கடினமாக உள்ளது. நம் உடல்நிலையை பேணிக்காப்பதற்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு ஆரோக்கியமாக உள்ளதா என்பதை முதலில் கண்டறிந்து நோய் தொற்று இருப்பின் அதற்கான மேற்சிகிச்சையினை மேற்கொள்ள வேண்டும். தற்போதைய நவீன உலகில் நாம் சுவாசிக்கின்ற காற்று, நாம் குடிக்கக்கூடிய தண்ணீர், உள்ளிட்ட இயற்கை சூழலியல் மாசுப்பட்டுள்ளது. உண்ணுகின்ற உணவு அதிக விஷத்தன்மையுடன் உள்ளது. இதை பற்றி நாம் அனைவரும் யோசிக்க வேண்டும்.
நமது மாவட்டத்தில் பிளாஸ்டிக்கை ஒழிக்க மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பிளாஸ்டிக் அதிக அளவில் ஒழிக்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. மாநில அளவில் மட்டுமல்லாது இந்திய அளவிலே நமது மாவட்டம் பிளாஸ்டிக் ஒழிப்பில் அதிக அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் குப்பை இல்லா குமரி என்ற திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வீடுகளில் உள்ள குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டு வருகிறது. தங்கள் வீடுகளில் உறிஞ்சிக்குழிகள் அமைத்து கழிவு நீரை வெளியேற்ற வேண்டும். மேலும் தங்கள் வீடுகளில் உள்ள குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து, மக்கும் குப்பையை உரமாக வேண்டும்.
சுகாதாரத் துறையின் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அதனடிப்படையில் பத்மநாபபுரம் அரசு மருத்துவமனையின் தரம் உயர்த்தப்பட்டு ரூ.5.75 கோடி ரூபாய்க்கு இன்று பல கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளது. நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சைக்காக புதிய மையம் அமைப்பதற்கான ஆக்கபூர்வமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பிரசவ வார்டு 14 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவு 3 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா காலத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நீக்குவதற்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையிலும், தக்கலை அரசு மருத்துவமனையிலும் ஆக்சிஜன் பிளான்ட் அமைக்கப்பட்டது. தக்கலை அரசு மருத்துவமனையில் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சாலைப்பணிகள், மருத்துவ துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் இலவச பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் இன்றைய தினம் நடைபெற்று வருகிறது. ஜாதி மத வேறுபாட்டால் ஏற்றத்தாழ்வு ஒழிக்கப்பட்டு அனைவரும் சமம் என்ற நிலையை உருவாக்க மிக முக்கியமான காரணமாக இருந்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். மேலும் உயர்கல்வியில் தமிழ்நாடு மிக உன்னத நிலையை அடைந்திருப்பதற்கு மிக முக்கியமாக காரணம் கலைஞர் ஆவார்கள். குடும்பத்தில் முதல் பட்டதாரிக்கு உயர் கல்வி இலவசம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியதால் பல ஏழை குடும்பத்தில் உள்ள மாணவர்கள் உயர்கல்வி பெற்றனர். புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் அரசு பள்ளியில் படித்துச் சென்ற பெண்கள் உயர்நிலை செல்வதற்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் உயர் கல்வி செல்லும் பெண்களின் விகிதம் 24% ஆகும். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 72 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. மருத்துவத் துறையில் வருமுன் காப்போம் திட்டம் இன்னுயிர் காப்போம் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது
ஒரு வளமான சமூகத்தை கட்டமைக்க வேண்டும் என்றால் அது ஆரோக்கியமான சமூகமாக இருக்க வேண்டும். நமது மாவட்டத்திற்கு என்னால் முடிந்த வரை இன்னும் மூன்று ஆண்டுகளில் மருத்துவ துறைக்கு எவ்வளவு நலத்திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வேன் என தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர் .த.மனோ தங்கராஜ் பேசினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் மருத்துவ பணிகளின் இணை இயக்குநர் மரு.பிரகலாதன், மருத்துவ பணிகளின் துணை இயக்குநர்கள் மரு.சுபைர் கான், மரு.கற்பகவல்லி, மருத்துவ ஒருங்கிணைப்பாளர் மரு.மாதவன், மக்களை தேடி மருத்துவ ஒருங்கிணைப்பாளர் மரு.வர்ஷா, குட்டக்குழி வட்டார மருத்துவ அலுவலர் மரு.அருண் சந்தோஷ், திருவட்டார் வட்டாட்சியர் .தாஸ், அரசு வழக்கறிஞர் .ஜாண்சன், பொன்மனை பேரூராட்சி தலைவர் .அகஸ்டின், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.