தக்கலை மற்றும் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.66.43 இலட்சம் மதிப்பில் சாலை அமைக்கும் பணியினை பால் வளத்துறை துறை அமைச்சர் .த.மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை மற்றும் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணியினை பால் வளத்துறை துறை அமைச்சர் .த.மனோ தங்கராஜ் அவர்கள் துவக்கி வைத்து, பேசுகையில்:-
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான அரசு தமிழ்நாட்டிற்குட்பட்ட அனைத்து மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தென்கரை ஊராட்சி பகுதியில் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் (2022-2023) ரூ.38.43 இலட்சம் மதிப்பில் காரவிளை சர்வீஸ் ஸ்டேசன் முதல் இலந்தன்கோட்டு கோணம் வரை சாலை சீரமைப்பு பணியும், தக்கலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சடையமங்கலம் ஊராட்சி தோப்பு ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.28 இலட்சம் மதிப்பில் புலியூர் குறிச்சியிலிருந்து தோப்பு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் வரை செல்லும் சாலை செப்பினிடும் பணியும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து பொதுமக்களின்
பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றார்.
இந்நிகழ்ச்சிகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் .பாபு, சடையமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் .அருள்ராஜ், தென்கரை ஊராட்சி துணைத்தலைவர் .லதாமணி, அரசு வழக்கறிஞர் .ஜகதேவ், உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.