கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே 17 வயதான பிளஸ் 1 மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் காதலன், அவரது நண்பர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள அடூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுமேஷ்(19). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயதான ஒரு பள்ளி மாணவியை காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் சுமேஷ் தன்னுடைய காதலியை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
அங்கு மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதன் பின்னர் சுமேஷ் தன்னுடைய நண்பர்களான சக்தி(18), அனூப் (22), அபிஜித்(20), மற்றும் அரவிந்த்(28) ஆகியோருக்கு போன் செய்து அங்கு வரவழைத்துள்ளார்.
அவர்களும் அந்த மாணவியை மிரட்டி கூட்டாக சேர்ந்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மாணவி தனக்கு நேர்ந்த துயரம் குறித்து வெளியே யாரிடமும் கூறவில்லை. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் பள்ளியில் குழந்தைகள் நல அமைப்பினர் மாணவிகளுக்கு கவுன்சிலிங் நடத்தினர். அப்போது அந்த மாணவி, தன்னை காதலன் சுமேஷ் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பலாத்காரம் செய்த விபரத்தை கூறி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்பினர் அடூர் போலீசில் புகார் செய்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காதலன் சுமேஷ் உள்பட 5 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பின் அவர்கள் நேற்று பத்தனம்திட்டா நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.