நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தொடர்பாளையும் அருகே மீண்டும் 1000 பாக்கு மரங்களை வெட்டி சாய்த்தனர் இந்த சம்பவம் அந்த பகுதி பொது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது மேலும் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்ட பரமத்தி வேலூர் தாலுகா உள்ள கரட்டுப்பாளையத்தில் கடந்த மார்ச் மாதம் 17ஆம் தேதி பட்டதாரி இளம் பெண் ஆடு மேய்க்க சென்றார் ,அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார், இது தொடர்பாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டார் .
இதன் தொடர்ச்சியாக வட மாநில தொழிலாளர்கள் பணிபுரியும் ஆலை கொட்டகையில் டிராக்டர்கள் குடிசையில் பள்ளி பஸ் போன்ற அமைப்பு குளத்தில் விஷம் கலந்தது என அடுக்கடுக்காக பல வன்முறை கடந்த இரண்டு மாதங்களாக நடந்து வந்தன.
இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு lic முகவர் சௌந்தரராஜனின் பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட அதே பாக்கு தோப்பில் மீண்டும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பாக்கு மரங்களை வெட்டி சாய்த்து உள்ளனர்.
மேலும் அருகே உள்ள பெரிய மருதூர் சேர்ந்த பிரகாஷ் மற்றும் சின்னமருதூர் பகுதியைச் சேர்ந்த மணி ஆகியோர் தோட்டத்தில் இருந்து மரவள்ளி கிழங்கு செடிகளும் வெற்றி சேதப்படுத்தப்பட்டன. பின்னர் அந்த பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றிலிருந்து பத்துக்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குழாய்களையும் மின் ஒயர்களையும் நபர்கள் அறுத்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மருத்துவர் சா உமா அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். கோவை மண்டல ஐஜி சுதாகர் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் தலைமையில் போலீசார் ஜேடர்பாளையம் பகுதிக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர் சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர்கள் வந்து ஆய்வு செய்தனர் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது .
இது சிறிது நேரம் மூடி சென்று நின்றுவிட்டது அதை யாரையும் கவி பிடிக்கவில்லை இந்த சம்பவம் தொடர்பாக ஜோலார்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்