கவிஞரேறு வாணிதாசனார் கலை இலக்கியப் பேரவை புதுவை தமிழ்ச் சங்கத்தில் கவிஞரேறு வாணிதாசனாரின் 108 ஆவது பிறந்தநாள் விழாவினை தமிழ் மாமணி. புலவர் இ. பட்டாபிராமன் தலைமை வகித்தார்.
பாவலர் பொன்வாணி ஜானகிராமன் வரவேற்புரையும் கவிஞர் வாணிதாசன் திருவுருவப் படத்தை ஐயை பொன்னுசாமி படத்தினை திறந்து வைத்தார்.மருத்துவர்.தி. திருவழுதி தொடக்கவுரையும், கால்நடை மருத்துவர்.ஜா. தமிழ்க்குமரன் நோக்கவுரையும் நிகழ்ச்சியை நல்லாசிரியர் வளர்மதி முருகன் தொகுத்து வழங்கினார்.
பாவலர் பொன்வாணி ஜானகிராமன் தொகுத்த அறிஞர்களின் பார்வையில் கவிஞரேறு வாணிதாசனாரின் ஆத்திசூடி கொன்றை வேய்ந்தோன் என்ற நூலும் மரபுமாமணி நா. பொன்னுசாமி தொகுத்த வாணிதாசன் படைப்புகள் ஆகிய இரு நூல்களும் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர். ஏம்பலம் செல்வம் அவர்கள் வெளியிட புலவர். சுப்பு தேவராசு கவிஞர் அமிர்தலிங்கம் கங்காதரன் அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
தமிழ் அறிஞர்களுக்கு கவிஞரேறு வாணிதாசன் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பில் தமிழ் பாடப் பிரிவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு பண முடிப்பும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது தொல்காப்பியச் செம்மல் புலவர். ஆ. காளியப்பன் தமிழ்மாமணி சு. வேல்முருகன் பாவலர். சுந்தரப் பழனியப்பன் தமிழ்மாமணி. நீலகண்ட தமிழன், பாவலர்.இரா.அ. பழனியப்பன் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் அவர்களின் பெயரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அருள் நந்தினி கிரிதரன் நன்றியுரை வழங்கினார்
நீலகிரி மாவட்ட செய்தியாளர்
Dr
G.ரஜினிகாந்த்