தமிழ் நாட்டிற்கு பேரறிஞர் அண்ணா பெருந்தகை அவர்களால் "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்டிய சூலை 18-ஆம் நாளினை "தமிழ்நாடு நாள் விழா"வாக கொண்டாடப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தி ஆணையிட்டதைத் தொடர்ந்து இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற "தமிழ்நாடு நாள் விழா"-வில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக "தமிழ்நாடு நாள் விழா" குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ-மாணவியர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு நடைப்பேரணியை மாவட்ட ஆட்சியர்ஆல்பி ஜான் வர்கீஸ் அவர்கள் கொடியசைத்து, துவக்கி வைத்து, பார்வையிட்டார்.
நிகழ்ச்சியின் துவக்கும் நிகழ்வாக
பள்ளி மாணவ மாணவிகளுடைய நடன நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு இடையே நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் கூடிய சான்றுகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
நிழ்ச்சியின் இறுதியில் மாணவ மாணவர்களுக்கு தமிழக அரசு வெளியிடப்பட்ட மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை செயல்பட்டுத்தும் விதாமாக மஞ்சள் பையுடன் மரக்கன்றுகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாபு, மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் பல்வேறுத்துறை அரசு அலுவலர்கள் உள்ளனர்.