ஏர்போட்டில் வேலை வாங்கித் தருவதாக பட்டதாரியை ஏமாற்றி ரூபாய் 2 கோடி மோசடி செய்த கணவன் மனைவி இருவரை குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்
கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைகடை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மார்த்தாண்டம் வங்கியில் பணிபுரிந்து வருவதாகவும் பட்டப் படிப்பை முடித்துவிட்டு வேலை தேடிக் கொண்டிருந்த நேரத்தில் அவரது மின்னஞ்சல் முகவரிக்கு விமான நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உள்ளதாக கூறியதை நம்பி ரூபாய் 2,49,23,205 கொடுத்து ஏமாற்றபட்டதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
இதன் பேரில் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சைபர் கிரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். உத்தரவுபடி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் மேற்பார்வையில், ஆய்வாளர் வசந்தி தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் புகார் மனு மீது விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் விமான நிலைய காலிபணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தி வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சேவை கட்டணம், விண்ணப்ப பரிசீலனை கட்டணம் என பல்வேறு தவணையாக ரூபாய் 2,49,23,205/- வாங்கிக்கொண்டு வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாகவும், பணத்தை திருப்பி கேட்ட போது ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது.இந்நிலையில் சைபர் கிரைம் சைபர் கிரைம் போலீசார் விமான நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த உடுமலைப்பேட்டை சார்ந்த பாலு என்பவர் மகன் ரெஞ்சித் வயது (45) மற்றும் அவரது மனைவி அம்பிகா வயது (36) ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.