கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த அழகிய மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ரூபன்(37) கொத்தனார். இவரது மனைவி அபினா(27). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவியிடையே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவத்தன்று அபினா கோபித்துக் கொண்டு தனது இரு குழந்தைகளுடன் வெளியே சென்றார். அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இது குறித்து ரூபன் தக்கலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே போல்
ஈத்தாமொழி பகுதியை சேர்ந்தவர் ஜெகன்(38) இவரது மனைவி ஜெமிலா ஜெனிபர்(33) இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று ஜெமிலா ஜெனிபர் தனது இரு குழந்தைகளுடன் மாயம்
ஆனார். இது குறித்து ஜெகன் அளித்த புகாரின் பேரில் ஈத்தாமொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.