நாகர்கோவில் மாநகராட்சி 14.வது வார்டு அருந்ததியர் தெரு பகுதியில் ரூ.4.30 லட்சம் மதிப்பீட்டில் சாலை காங்கீரிட் தளம் அமைக்கும் பணியினை வார்டு கவுண்சிலர் கலாராணி முன்னிலையில் மாநகர மேயர் மகேஷ் துவக்கி வைத்தார்.
உடன் மாநகர துணை செயலாளர் டாக்டர் வேல்முருகன் மாநகர இளைஞரணி அமைப்பாளர்சி.டி. சுரேஷ் வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துகிருஷ்ணன் வட்ட பிரதிநிதிகள் ரஞ்சித் ராணி ஜெகன் ராம்குமார் இளைஞரணி சுனில்குமார் மற்றும் பிரசாந்த் தன்ராஜ் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேப்போல் 9 வது வார்டு பகுதி திருப்பதிநகரில் சாலை மேம்பாட்டு பணியினை கவுண்சிலர் ராமகிருஷ்ணன் முன்னிலையில் மேயர் மகேஷ் துவக்கி வைத்தார் உடன் மாநகர அவைதலைவர் பன்னீர்செல்வம் அன்பு பரமசிவன் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.