காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத்நீதிமன்றம் விதித்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில் இதை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார் .
இதற்கு மத்திய அரசின் தூண்டுதல் தான் காரணம் என மத்திய அரசை கண்டித்து நாகர்கோவில் பௌலிங் பூத் காங்கிரஸ் கட்சி சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நிகழ்வுக்கு மாவட்ட முன்னாள் தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார் மாநகர தலைவர் நவீன்குமார், மாவட்ட பொது செயலாளர் அலெக்ஸ் ஜாண்சவுந்தர் அனிஷா சகாயபிரவின் ஆதிராம் தேவசகாயம் ராஜபாண்டியன் கிங்ஸ்டன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.