பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் 85வது பிறந்தநாள் விழா

sen reporter
0

 நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் 85வது பிறந்தநாளையொட்டி அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு பாமகவின் தங்க மோதிரம் வழங்கி கொண்டாடினர்... 


பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் 85வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் பாமகவினர் மற்றும் வன்னியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடினர்.

இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பாமகவின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பூர்ண நலத்துடன் வாழக்கோரி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தும்,ஆதரவற்ற இல்லத்தில் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.,

இதை தொடர்ந்து அரசு மருத்துவமனையில் பிறந்த பெண் குழந்தைக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து உள் நோயாளிகளுக்கு தேவையான பால் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி பாமகவினர் கொண்டாடினர். நிகழ்வுக்காண அனைத்து ஏற்பாடுகளையும் நாமக்கல் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி அமைப்பு செயலாளர்
 க.உமா சங்கர் செய்திருந்தார்.....
மேலும் மாவட்ட தலைவர் ,,மாவட்ட செயலாளர் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பாட்டாளி மக்கள் கட்சியினர் மற்றும் வன்னியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்......

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top