கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் டாஸ்மாக் மதுக்கடை மேற்பார்வையாளர் கோபாலகிருஷ்ணன் பணி முடிந்து வீடு செல்லும் வழியில் அவரை மர்ம கும்பல் கொலை வெறி தாக்குதல் நடத்தியது. இதில் அவரது கைகள் வெட்டப்பட்டு கைவிரல் துண்டிக்கப்பட்டது.
தலையிலும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. எனவே கோபாலகிருஷ்ணனை கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை உடனே கைது செய்ய வேண்டும். மேலும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும். தாக்குதலுக்குள்ளான கோபாலகிருஷ்ணன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து டாஸ்மாக் தொழிற் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.