குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சானல்களிலும் கடை மடை வரை தண்ணீர் கொண்டு செல்ல வலியுறுத்தி குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாரதியஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய அணி தலைவர் முருக ராஜன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் எம் ஆர் காந்தி எம்எல்ஏ ,பாரதியஜனதா மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாநகராட்சி கவுன்சிலர் ஐயப்பன், பாரதிய ஜனதா முன்னாள் மாவட்ட தலைவர் முத்துகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.