நாகர்கோவில் அடுத்துள்ள சுங்கான் கடையில் வசித்து வரும் அஇஅதிமுகவை சேர்ந்த முன்னாள் பஞ்சாயத்து தலைவி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் இன்றுஅவரது வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்
நாகர்கோவிலில் அடுத்துள்ள சுங்கான்கடை பகுதியை சேர்ந்தவர் லதா சந்திரன் இவர் கடந்த 2011 முதல் 2016 ம் ஆண்டு வரை ஆளூர் பஞ்சாயத்தில் தலைவியாக இருந்தார்
அப்போது அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தனி நபர் ஒருவர் தொடுத்த வழக்கு ஒன்றில் நீதிமன்ற உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அவரது வீட்டில் சோதனை மேற்கொண்டனர் இதில் 120 பவுன் தங்க நகை மற்றும் சொத்துக்கள் சொகுசு கார்கள் இருப்பது கண்டறியப்பட்டது இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்கள் மேலும் புலன் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் .