தேனி மாவட்டம் சுக்குவாடன்பட்டியில் உள்ள நரிக்குறவர் காலனி செல்லும் பாதை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வேதனைக்குள்ளாகின்றனர்.
இப்பகுதி
மேலும்,இப்பகுதியில் குப்பைக்கழிவுகளும் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதாக புகார் தெரிவிப்பதோடு நோய்த்தொற்று பயத்திலும் உள்ளனர். நரிக்குறவர்களாகிய எங்களது புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என ஊஞ்சாம்பட்டி ஊராட்சி நிர்வாகம் செயல்படுகிறதா?என நாள்தோறும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
யார்தான் எங்கள் குறைகளை தீர்த்து வைப்பார் என கண்ணீருடன் இப்பகுதி மக்கள் காட்சி அளிக்கின்றனர். சம்பந்தப்பட்ட ஊஞ்சாம்பட்டி ஊராட்சி நிர்வாகம் நோய்த்தொற்று ஏற்படும்முன் இப்பகுதி மக்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என கோரிக்கை.